விஜயின் வீட்டில் மறைந்திருந்த இளைஞர்
விஜயின் வீட்டில் மறைந்திருந்த இளைஞர்
விஜயின் நீலாங்கரை வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கி இருந்த இளைஞர் பிடிபட்டார். நேற்று ஒரு நாள் முழுவதும் மொட்டை மாடியில் அந்த நபர் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று மாலை விஜய் நடைபயிற்சிக்காக மாடிக்கு சென்ற பொழுது அங்கு ஒரு நபர் மறைந்துள்ளதை கவனித்துள்ளார். உடனே அந்த நபர் தளபதி விஜய் அவர்களை ஓடிச்சென்று கட்டிப் பிடித்துள்ளார். எனவே அவரை தனது ரசிகர் என அடையாளம் கண்ட விஜய் அவருடன் அன்பாக பேசி அவரை தரை தளத்துக்கு அழைத்து வந்துள்ளார்
பின்பு விஜய் வீட்டு காவலாளிகள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் இன்று போலீஸிடம் அந்த நபரை அவர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் எமர்ஜென்சிக்காக விஜய் பயன்படுத்தும் விஜயின் வீட்டு பின் சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.
இது ஒருபுறம் இருக்க எவ்வளவு பாதுகாப்புகள் இருந்தும் விஜயின் வீட்டில் ஒருவர் நுழைந்தது அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் கவனம் தேவை என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
Comments
Post a Comment