Posts

சிவகாசி பட்டாசு - 7 கோடிக்கு விற்பனை

Image
 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகாசியில் மட்டும் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் பட்டாசுகள் விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன.  மக்கள் கூட்டம் அலைமோதி பட்டாசுகளை தங்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும் தங்கள் உறவினர்களுக்கும் வாங்கிச் சென்றதாக பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   மேலும் 2026 ஆம் ஆண்டில் இந்த பட்டாசு விற்பனையானது அதன் உற்பத்திகளை மென்மேலும் அதிகப்படுத்தும் என்றும் தங்களது கருத்துக்களை பட்டாசு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

Image
 பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார். நாட்டு மக்களே!  மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.  மேலும் இந்த தீபாவளியானது அயோத்தியில் ராமர் கோவில் கட்டி எழுப்பிய பிறகு வரும் இரண்டாவது தீபாவளி எனவும், ராமர் அநீதியை எதிர்த்து போராடும் பலத்தை தருகின்றார் எனவும் ஆபரேஷன் சிந்தூர்  இதற்கு தலைசிறந்த உதாரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் நாடு முழுவதும் ஒளி தீபங்களை மலரச் செய்து உணர்வு என்னும் தீபங்களை ஏற்றுங்கள் எனவும் பிரதமர் மோடி தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். L

மெட்ரோ ரெயிலில் சைக்கிளுக்கு அனுமதி- ஆனந்த கண்ணீர் வடிக்கும் பயணிகள்

Image
  மெட்ரோ ரெயிலில் சைக்கிளுக்கு அனுமதி மும்பையில் மெட்ரோ ரெயிலில் பயணிகள் தங்களுடன் சைக்கிளை எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல். ஆனந்த கண்ணீர் வடிக்கும் பயணிகள் இதுபற்றி பயணி ஒருவர் கூறுகையில், இந்த திட்டம் மிகவும் வரவேற்க படவேண்டிய ஒன்று எனவும் இதனால் பயனாளிகள் எளிதில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சைக்கிள்களில் சென்று வர முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டம் அனைத்து மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேணும் எனவும் பயணிகள் ஆனந் தக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Nissan Tekton SUV (நிசான் டெக்டான் SUV)

Image
  Nissan Tekton SUV (நிசான் டெக்டான் SUV) 2026-ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதன் அறிமுகத்திற்கு இன்னும் பல மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும்.  எனினும் இந்தக் கார் மார்க்கெட்டில் நிச்சயம் பல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆவின் பால் வரிக்குறைப்பு - டிடிவி தினகரன் கருத்து

Image
  ஆவின் பால் பொருட்களுக்கான GST வரிக்குறைப்பை தமிழக அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள் ளார் . பால் பொருட்களுக்கான GST வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் நமது தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்கப்படும் பால் சார்ந்த பொருட்கள் முந்தைய வரிவிதிப் பு விலையின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விலை குறைப்பின்றி விற்பனை வரிக்குறைப்பால் பால் சார்ந்த பொருட்கள் விலை குறைத்து விற்பனை செய்யப்படும் றன எதிர்பாக்கப்பட்ட நிலையில் , ஆவின் பாலகங்களில் விலை குறைப்பின்றி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது . GST வரி குறைப்பை அமல்படுத்தி, பொதுமக்களுக்கு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார் .

Chennai One என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

Image
சென்னை ஒன் {Chennai One} என்ற புதிய செயலியை தொடங்கி வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.  அரசு பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்கள் மற்றும் ஆட்டோக்கள் போன்றவற்றில் பயணிக்க ஒரே QR Code ஐப் பயன்படுத்தி டிக்கெட் பெற இவ்வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பயணத்தை எளிமையாக்க Chennai One என்ற செயலியை அறிமுகப்படுத்தியதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெருமிதம்.

கரூரில் விஜய் - தா.வெ.க அதிரடி

Image
 கரூரில் விஜய் - தா.வெ.க  அதிரடி  வரும் 27 ஆம் தேதி சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அந்த ப் பயணத் திட்டத்தை மாற்றி வருகின்ற 27 ஆம் தேதியன்று கரூரில் தனது பிரச்சார சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கின்றார் . இந்த மாற்றமானது அவரகளது கரூர் தொண்டர்கள் மத்தியில் சந்தோசத்தை கொடுத்துள்ளது .