ஆவின் பால் வரிக்குறைப்பு - டிடிவி தினகரன் கருத்து
ஆவின் பால் பொருட்களுக்கான GST வரிக்குறைப்பை தமிழக அரசு விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
பால் பொருட்களுக்கான GST வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில் நமது தமிழக அரசின் ஆவின் நிர்வாகத்தின் மூலம் விற்கப்படும் பால் சார்ந்த பொருட்கள் முந்தைய வரிவிதிப்பு விலையின் அடிப்படையிலேயே விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விலை குறைப்பின்றி விற்பனை
வரிக்குறைப்பால் பால் சார்ந்த பொருட்கள் விலை குறைத்து விற்பனை செய்யப்படும் றன எதிர்பாக்கப்பட்ட நிலையில், ஆவின் பாலகங்களில் விலை குறைப்பின்றி விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
GST வரி குறைப்பை அமல்படுத்தி, பொதுமக்களுக்கு கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
Comments
Post a Comment